Monday, September 12, 2011

ராஜபக்ஷ நிர்வாகமும்: தமிழ் தேசியக் கூட்டமைப்பும்: சிங்கள சமூகமும்- சுனந்ததேசப்பிரிய!

Monday, September 12, 2011
அரசியல் தீர்வொன்றுக்காக இணக்கத்திற்கு வருவதற்காக அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிந்துள்ளது. கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அரசாங்கம் எழுத்து மூலமான பதிலை வழங்கும் வரை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதில்லை என கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு இந்த பேச்சுவார்த்தைகள் முறிவடைவதற்கான காரணமாகும்.

இதற்கு பதிலளித்திருந்த அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை குழுவின் செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன, கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது எனவும் அது புலிகளின் செயற்பாடுகளுக்கு ஈடானது எனவும் தெரிவித்திருந்தார்.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானது எனக் கூறி, கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஆதரித்து, அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான சுமணசிறி லியனகே ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். 4 மாதங்களுக்கு முன்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த யோசனைகளுக்கு, அரசாங்கம் பதிலளிக்காததது, நியாயமற்றது என அவர் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து, அரசியல் தீர்வு குறித்து தீர்மானிக்கப்படும் என ராஜபக்ஷ அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது. 10 சுற்று பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொண்ட போதிலும் உரிய தீர்வுகளை முன்வைக்க அரசாங்கம் தவறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது காலத்தை கடத்தும் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.

ராஜபக்ஷ அரசாங்கத்தினால், பாரிய கோஷங்களுக்கு பின்னர், நியமித்த சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழு 83 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. இந்த தெரிவுக்குழு தயாரித்த தீர்வு யோசனையை குப்பையில் வீசிய அரசாங்கம், நாடாளுமன்ற தெரிவக்குழு நியமிப்பது, கேலிக்குரியதல்ல என்றால், கட்டளை அல்லவா?. இது அரசியல் தீர்வு திட்டம் ஒன்றை முன்வைப்பதை காலதாமதம்படுத்தும் நடவடிக்கையே.




பசில் மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் தற்போதுள்ள அரசியல் அமைப்பு போதுமானது எனவும் அரசியல் தீர்வு அவ்வளவு முக்கியமல்ல என தெரிவித்துள்ளனர். அத்துடன் 13வது அரசியல் அமைப்பு திருத்தம் அப்படியே முழுமையாக அமுல்படுத்தப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அப்படியானால் நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது எதற்கு?.

இலங்கை அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் தமிழ் தேசிய அரசியலை எந்த திசையை நோக்கி இட்டுச் செல்லும்?. தற்போதுள்ள நிலைமையில் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இடையில் விரிவான ஒற்றுமை ஏற்பட்டு வருகிறது.

அத்துடன் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு விரைவான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என இந்திய உள்ளிட்ட ஏனைய சர்வதேச நாடுகள் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மிகவும் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில் மற்றும் ஒரு முக்கிய விடயம் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் அரசியல் கட்சியிகள் சிங்கள சக்திகளை இணக்கம் காண வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய அரசியலின் ஒரு குறைப்பாடு என்னவென்றால், இலங்கை சமூகத்தில் பாதிப்புகளை அனுபவித்து வரும் ஏனைய சமூகத்தினர் தொடர்பில் கரிசனை கொள்ளாது, ஒதுங்கி இருப்பதாகும் எனவும் லியனகே தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். சிங்கள சமூகத்தில் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு பெயரளவில் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதருவு வழங்கவில்லை.

ஆரம்பகாலத்தில் தமிழ் புரட்சிகர அமைப்புகளான புளொட், ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புகள் சிங்கள முற்போக்கு சக்திகளுடன் கலந்துரையாடல்களை கட்டியெழுப்ப முயற்சித்தன. எனினும் விடுதலைப்புலிகள் தலைமையில் ஏற்பட்ட இராணுவ ரீதியிலான தமிழ் தேசியவாதம் இந்த சந்தர்ப்பங்களை இல்லாமல் செய்து விட்டது. இதனை லியனகே தெற்குக்கு எதிரான தமிழ் தேசியவாதம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டத்தில் மாத்திரம் தன்னை வரையறுத்துக் கொள்ளாமல், கட்டயாமாக இடதுசாரி சக்திகளின் பொதுவான போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என சுமணசிறி லியனகே யோசனை முன்வைத்துள்ளார்.

எமது நிலைப்பாடு நியாயமானதும், சாதாரணமானதும் என நாங்கள் அனைத்து தரப்பினருக்கு தெளிவுப்படுத்துவது அவசியம். நாங்கள் அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்க மாட்டோம் என சர்வதேச சமூகத்திற்கு தெளிவுப்படுத்த வேண்டும். அதேபோல் இலங்கையின் சிங்கள சமூகத்தின் ஒரு தரப்பாவது எமது எமக்கான தீர்வு நியாயமானது என ஏற்றுக்கொள்வது அவசியம்' என அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்; தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் தனது இங்கிலாந்து விஜயத்தின் போது, தெரிவித்திருந்த இந்த கருத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் சிலர் எதிர்ப்பை வெளியிட்டனர். சிங்கள சமூகத்தினர், தமிழ் சமூகத்தின் நியாயமான கோரிக்கை தொடர்பில் எவ்வித உணர்வுகளை கொண்டீராத அடிப்படைவாத சமூகம் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்களும் புலம்பெயர் தமிழர் மத்தியில் உள்ளனர். (இதே நிலைப்பாடுகளை கொண்டுள்ள புலம்பெயர் சிங்களவர்களும் உள்ளனர்.) இதனால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனி ஈழத்தை தவிர வேறு தீர்வு இல்லை இவர்கள் சிந்திக்கின்றனர்.

போருக்கு பின்னரான இலங்கை தமிழ் தேசியவாத அரசியல் அமைப்புகள் ஆயுத போராட்டம் மற்றும் சுதந்திர தமிழீழ அரசாங்கம் என்ற இரண்டு நிலைப்பாடுகளை கைவிடுவதானது முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றே குரல் எழுப்பி வருகின்றன.

ஆயுதப்போராட்டத்தின் மூலம் வெற்றிக்கொள்ள முயற்சித்த தனிநாடு அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு விடயத்தில் சிங்கள சமூகத்தின் எந்த தரப்பின் ஆதரவுமின்றி அதனை வெற்றிகரமாக முன்னெடுப்பது சிரமம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனினும் அவ்வாறான தீர்வுக்கு சிங்கள சமூகத்தின் பெருபான்மை மக்களின் ஆதரவு அத்தியவசியம் என்பது தவறான கருத்தாகும்.

சிறுபான்மை சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் அதிகாரத்தை பெருபான்மை சிங்களவர்களுக்கு வழங்குவது இலங்கைக்கு தேவையான ஐக்கிய ஜனநாயகத்திற்கு முரணானதாகும். அரசியல் தீர்வு குறித்து அரசியல் தலைமைகள் தீர்மானிக்கும் அதே சந்தர்ப்பத்தில், சிங்கள மக்களின் விருப்பதை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்கள் என்பவர்கள் வழிகாட்டுபவர்களே அன்றி, பின்னு சென்று ஒழிந்து கொள்பவர்கள் அல்லர்.

அரசியல் தீர்வு விடயத்தில் சிங்கள மக்கள் இடையில் ஆதரவை கட்டியெழுப்ப வேண்டியது சிங்கள ஜனநாயகவாதிகள் மற்றும் முற்போக்காளர்களின் பொறுப்பாகும். இந்த நோக்கத்தை வெற்றிபெற செய்ய, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட சிங்களவர்களின் உரிமைகள் சம்பந்தமான போராட்டங்கள் சம்பந்தமாக செயற்பாட்டு ரீதியான தலையீடுகளை மேற்கொள்வது அவசியமாகும். தமது உரிமைகளுக்காக போராடும் போதே மக்கள் தமது நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை அறிந்துக்கொள்வர்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வி முக்கியத்துவம் பெறுகிறது. கிராமபுற சிங்கள மக்கள் மீது தனக்கு மரியாதை இருகின்றது. நான் சிங்கள மக்களுடன் வசித்துள்ளேன். நான் சிங்களவர்களை எனது சகோதர சகோதரிகளாகவே பார்கின்றேன். அவர்கள் தொடர்பில் எனக்கு உணர்வுபூர்வமான எண்ணமே உள்ளது. சென்னையில் சிங்களவர்கள் தாக்கப்பட்டது தவறானது. இதற்கு இடமளிக்க கூடாது என சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இத்தோடு நின்று விடமால், சிங்களவர்கள் மீது சென்னையில் தாக்குதல் நடத்த வேண்;டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்தால் எவ்வளவு சிறந்ததாக இருக்கும்?.

சில சந்தர்ப்பங்களில் இலங்கையின் அரசியல் சூழலில் தீர்மானகரமான ஜனநாயக பாத்திரத்தை கைப்பற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாய்ப்பு ஏற்படவும் இடமுள்ளது. இதற்கு ஜனநாயக ரீதியான செயற்பாடுகளும், திட்டங்களும் தேவை. உதாரணமாக வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக சமூக நீதி, ஜனநாயக ரீதியான ஆட்சி தொடர்பான விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க முடியும். ஊடக சுதந்திரம், சிறுபான்மை இனத்தவரின் உரிமைகள் ஆகியவற்றை அதில் உள்ளடக்க முடியும். அரசியல் தீர்வு கோரி நிற்பது போன்று, அதற்கு பின்னரான பிரச்சினைகளின் போது, முற்போக்கான மற்றும் ஜனநாயக ரீதியில் பதிலளிக்க வேண்டியது முக்கியமாகும். இப்படியான அரசியல் வளர்ச்சிக்கு தமிழ் தேசிய அரசியலை நகர்த்துவது தமிழ், சிங்கள முற்போக்கு சக்திகளின் பொறுப்பாகும்.

No comments:

Post a Comment