Monday, September 12, 2011

எங்களை புறக்கணித்துவிட்டு அரசியல் நடத்த முடியாத நிலைமையை உருவாக்குவோம்-மனோ கணேசன்!

Monday, September 12, 2011
ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்டத்து தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் சக்தி. தமிழ் மக்களையும் எமது கட்சியையும் எந்தவொரு பெரும்பான்மை கட்சியும் உதிரிகளாக நடத்துவதற்கு நாங்கள் இடந்தரமாட்டோம். எங்களை புறக்கணித்துவிட்டு எந்தவொரு பெரும்பான்மை கட்சியும் கொழும்பிலே அரசியல் நடத்த முடியாத நிலைமையை நாம் உருவாக்குவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர்கள் எஸ்;.குகவரதன் கே.ரீ. குருசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக்கூட்டம் கொழும்பு ஆமர்வீதி பிறைட்டன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது

இளைய சகோதரர்கள் குகவரதனும் குருசாமியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டு, கொழும்பு மாநகரசபைக்கான நமது கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றார்கள். அவர்கள் இருவரையும் நமது கட்சி அங்கத்தவர்களாக கட்சிக்குள்ளே வரவேற்றதைப்போல், அவர்கள் இருவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களாக வெற்றி பெறவேண்டும் என உளமாற வாழ்த்துகின்றேன். அவர்கள் வந்த இடம் நல்ல இடம். இது தமிழ் மக்களுக்காக நல்லதை நினைத்து, நல்லதை பேசி, நல்லதை செய்யும் இடம். நேர்மையும் அர்ப்பணிப்பும் துணிச்சலும் தூரப்பார்வையும் குடிகொண்டிருக்கின்ற இடம்.

வெற்றிகரமான அரசியலுக்கு கட்டாயம் பொறுமை தேவை

அரசியலில் வெற்றி பெறுவதற்கு பொறுமை கட்டாயம் தேவை. நான் பத்து வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்தேன். இரு வருடங்களைத்தவிர. பெரும்பாலும் எதிர்கட்சியில் இருந்தேன். மூன்றுமுறை ஆளுகின்ற அரசுடன் இணைந்துகொள்வதற்கு எனக்கு அழைப்பு வந்தது. 2004ல் சந்திரிக்க பண்டாரநாயக்க அழைத்தார். 2005ல் ஒருமுறையும் 2009ல் ஒருமுறையும் பசில் ராஜபக்\ எனக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் அழைப்பு விடுத்ததில் தவறேதும் கிடையாது. அழைப்புகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அரசுடன் இணைந்து ஆகப்போவது எதுவுமில்லை என்பதால் நான் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வில்லை. அரசுடன் இணைந்து கொண்டவர்கள் எதையும் சாதிக்கவில்லை. எனவேதான் பொறுமையுடன் இருக்கின்றேன். பாராளுமன்றத்தில் இருந்தாலும்ää இல்லாவிட்டாலும் மக்கள் மனங்களில் வாழ்கின்றேன். பொறுமையாக இருந்தால் உரிய இடம்ää உரிய நேரத்தில் தேடிவரும். புதிதாக பாராளுமன்றம் சென்ற சிலருக்கு பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருக்க முடியவில்லை. பாராளுமன்றம் என்பது என்ன என்பதை படிப்பதற்கு முன்னர் சிலருக்கு பிரதி அமைச்சராகிää அமைச்சராகிää ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிடுகின்றது. இப்படியானவர்களின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானவுடனையே சடுதியாக முடிவிற்கு வந்துவிடுகின்றது.

அரசியலிலிருந்து நான் விடைபெறுவேன் என சிலர் கனவு கண்டார்கள்

எனது நெஞ்சிலும் முதுகிலும் குத்தியவர்களில் பலர் இன்று காணாமல் போய்விட்டார்கள். எஞ்சியிருக்கும்; சிலர் காணாமல் போய்கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை தேசியக் கட்சி ஒன்றின் கொழும்பு மாவட்ட அரசியல்வாதி ஒருவர் எனக்கு எதிராக சதி செய்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எமது கட்சிக்கு உறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நியமனம் தரப்படுவதை நிறுத்தினார். என்னை அரசியலிலிருந்து அகற்றவேண்டும் என்பதுவே இவரது சதிநோக்கமாகும். கொழும்பு மாவட்டத்திலே பலமிக்க தமிழ் முஸ்லிம் தலைமைகள் இருக்கக்கூடாது என்பதுவே அவரது கொள்கையாகும். பாராளுமன்றம் செல்லாவிட்டால் மனோ கணேசன் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு அரசியலிலிருந்து விடைபெற்றுவிடுவார் என இவர் கனவு கண்டார். ஆனால் இன்று நடந்தது என்ன? எங்களை அழிக்க நினைத்தவர்கள் இன்று தங்களுக்குள்ளே அடிப்பட்டுக்கொண்டு தங்களைத்தாங்களே அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். நான் எமது கட்சியின் தலைவர் என்ற முறையிலே முன்னரைவிட தீவிரமாக செயற்படுகின்றேன். தலைநகர பிரதேச தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலங்களைவிட எமது கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. எமது கட்சி எத்துணை சவால்கள் வந்தாலும் அவை அனைத்தையும் வெற்றிகரமாக சந்தித்து வீரநடை போட்டுக்கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெரிய பரம இரகசியம் எதுவும் கிடையாது. நெஞ்சிலே நேர்மையும் நெஞ்சில் துணிவும் இருந்தால் போதும்.

உள்@ராட்சி சபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது எமது கட்சியின் கொள்கை

நாங்கள் 2002ம் வருடம் நடைபெற்ற கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 2006 லும் தனித்து போட்டியிட்டோம். அதுபோல் இம்முறையும் தனித்து போட்டியிடுகின்றோம். Cs;Sராட்சி சபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் மாகாணசபை பாராளுமன்ற தேர்தல்களில் அவசியமானால் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொள்கையாகும். உள்ளுராட்சி சபைத் தேர்தலில்கூட தனித்து எங்களது சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாவிட்டால் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனிக்கட்சி என்று கூறிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றது? தனித்துவமான ஏணிச் சின்னம் எங்களது சொந்தச் சின்னம் என்று சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றது? ஆகவேதான் ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகரசபை தெகிவளை-கல்கிசை மாநகரசபை, கொலொன்னாவ நகரசபை ஆகிய சபைகளுக்கு தனித்து ஏணிச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. மார்ச் மாதம் நடைபெற்ற உள்@ராடசி சபைத் தேர்தல்களில் நுவரெலியா மாவட்டத்தில் நமது கட்சி தனித்து போட்டியிட்டது. இன்று நாம் கொழும்பிலே தனித்து போட்டியிடுவது சிலருக்கு வலிக்கின்றது. இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. எமது கட்சி எந்த முறையில் போட்டியிடவேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிப்போம். அதை பெரும்பான்மை கட்சிகள் தீர்மானிக்க முடியாது.

அரசியல் கூட்டணி என்பது ஒரு திருமணமாகும்

இன்று சிலருக்கு தனித்துவமான தமிழ் கட்சி என்றால் என்னவென்று புரியவில்லை. இன்னும் சிலருக்கு அரசியல் யதார்த்தத்திற்கு ஏற்ப பெரும்பான்மை கட்சிகளுடன் நாங்கள் ஏற்படுத்தும் தேர்தல் கூட்டணிகளை பற்றிய விளக்கம் இல்லை. எங்களுக்கு மாகாணசபை தேர்தல்களின் போதும்ää பாராளுமன்ற தேர்தல்களின் போதும் ஐக்கிய தேசியக் கட்சி தேவைப்படுகின்றது என்று சொல்லிப்பார்க்கிறார்கள். தேர்தல் கால கூட்டணி என்பது ஒரு திருமணத்தை போன்றது. திருமணம் நடைபெற வேண்டும் என்றால் மணமகனும் மணமகளும் ஒருவரையொருவர் மணம் செய்ய உடன்படவேண்டும். எங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தேவைப்பட்டது என்றால், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாங்கள் தேவைப்பட்டிருக்கின்றோம். அதனால்தான் அரசியல் கூட்டணி ஏற்படுகின்றது. பலவந்தமாக நாங்கள் எவர் மடியிலும் சென்று உட்காருவதில்லை. அதற்கான அவசியம் எங்களுக்கு கிடையாது.

எதிர்கால கூட்டணி

எங்களை திட்டுவதைப்போல் சிலர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் திட்டுகிறார்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்பொழுதுதே தீர்மானித்து கூறமுடியாது. இந்த அரசாங்கத்திற்கு எதிரான பாரிய எதிர்கட்சி கூட்டணி உருவாகலாம். அதில் நாங்கள் நிச்சயமாக இருப்போம். அக்கூட்டணியில் முஸ்லிம் காங்கிரசும் இதொகாவும் இடம்பெறலாம். மலையகத்தில் உள்ள ஏனைய கட்சிகளும் எம்முடன் எதிர்கால தேர்தல்களின்போது கரங்கோர்க்கலாம். சிலவேளைகளில் இலங்கை முழுக்க இருக்கின்ற அனைத்து சிறுபான்மை கட்சிகளும் இணைந்து புதிய தமிழ் பேசும் மக்களின் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தலாம். அனைத்தையும் சம்பந்தப்பட்ட காலகட்டத்தின் அரசியல் நகர்வுகள்தான் தீர்மானிக்கும். இதுதான் அரசியல் யதார்த்தமாகும். இது படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் புரியவேண்டும்.

No comments:

Post a Comment