Sunday, September 04, 2011
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு முதன் முதலாக சிறைக்கைதிகள் தமது குடும்ப அங்கத்தவர்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்று இன்று இடம்பெறுகிறது.
இதற்கமைய கண்டி பல்லேகலை சிறைச்சாலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகள் மூலம் சிறைக்கைதிகள், அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் சிறைச்சாலை சேவையாளர்களுக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாளைய தினம் இடம்பெறும் தொழிற்பயிற்சியை பெற்ற 10 அயிரம் கைதிகள் பங்குகொள்ளும் பிறிதொரு நிகழ்வில் அமைச்சர் சந்ர சிறி கஜதீர கலந்து கொள்ளவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment