Sunday, September 04, 2011
மாத்தறை கல்வி வலயத்தில் பரீட்சை தொடர்பாடல் நிலையம் அமைக்கப்பட்டிருந்த பாடசாலை வளாகத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியசட்கர் தலைமையில் வசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் முன்னாள விமானப்படை உறுப்பினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேந்கொண்டு வருகின்றனர்.
தமது தாய் மற்றும் ஆசிரியையுடன் பாடசாலை வளாகத்திற்கு வந்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுளளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகச்சைபெற்றுி வருவதாக தெரிவித்த பொலிஸார். இதுவரை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யமுடியாமற்போயுள்ளதாக குறிப்பிட்டார்.
சிறுமியை வைத்திய நிபுனர் ஒருவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கையெடுப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதேவேளை குறித்த பரீட்சை தொடர்பாடல் நிரையத்தில் கடமையில் இருந்த நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பேர் கடமைநேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸார் சார்ஜனும் கான்ஸ்டபிளும் அடங்குவதாக ஒருவரும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடமையை நிறைவேற்றத்தவரியமை இரகசிய ஆவணங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அதனை தவறவிட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்களிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக மாகாண அரச சேவைகள் அணைக்குழுவிற்கு அறிவித்துசம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாளகம் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment