Sunday, September 4, 2011

மேல் மற்றும் தென் கடற்பரப்பில் நீராடச் செல்வது ஆபத்து!

Sunday, September 04, 2011
இலங்கையின் மேல் மற்றும் தென் கடற்பரப்பில் நீராடச் செல்வது ஆபத்தானது என கடற்கரை பாதுகாப்பு திணைக்களத் தெரிவிக்கிறது.

தென் மேல் பருவப் பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளதால் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் எட்மிரல் தயா தர்மபிரிய தெரிவிக்கிறார்.

ஏனைய வருடங்ளில் ஜுன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருகின்றபோதும், இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாத இறுதி பகுதியிலேயே தென்மேல் பருவ பெயர்ச்சி வலுவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நாட்டின் மேல் மற்றும் தென் கடற் பரப்புகள் அதிக கொந்தளிப்பாக அமைந்துள்ளதென கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிடுகிறது.

உயிர் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற் கரை பிரதேசங்களில் நிலவும் அபாயத்தை உணரத்தும் வகையில் சிவப்பு சமிஞ்சை காட்சிபடுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிர் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடாத இடங்களில் நீராடச் செல்வதால் உயிராபத்துக்கள் அதிகம் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment