Wednesday, September 07, 2011பீஜிங்: இந்திய போர்க் கப்பலுடன் சண்டை எதுவும் நடக்கவில்லை என்று சீன அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய போர்க் கப்பல் ஐஎன்எஸ் ஐராவதம் நல்லெண்ண பயணமாக கடந்த ஜூலை மாதம் வியட்நாம் சென்றது. அங்கிருந்து திரும்பும் போது தென் சீன கடல் பகுதியில் சீன போர்க்கப்பல் இடைமறித்து தாக்கியதாகவும், இருநாட்டு கப்பல் படை வீரர்களுக்கு இடையில் சண்டை நடந்ததாகவும் லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் கடந்த வாரம் செய்தி வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய போர்க் கப்பலுடன் சீன கப்பல் சண்டையிட்டதாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் அடிப்படை அற்றது. அதுபோன்ற எந்த சண்டையும் நடக்கவில்லை. அந்த செய்தியை இந்திய அதிகாரிகளும் மறுத்து உள்ளனர். நாங்களும் சீன கப்பல் படை அதிகாரிகளிடம் இதை உறுதி செய்தி கொண்டோம்.
இருநாடு சம்பந்தப்பட்ட அதுவும் ராணுவத்துடன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிடும் போது, சம்பந்தப்பட்ட நாடுகளிடம் உறுதி செய்து கொண்டு வெளியிட வேண்டும். இவ்வாறு ஜியாங் யூ கூறினார்.
No comments:
Post a Comment