Wednesday, September 07, 2011உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தேர்தல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் வசிக்கும் அரச ஊழியர்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
சுயாதீன மற்றும் கட்சி சார்பற்ற தேர்தலொன்றை நடத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அதன் பிரகாரம் குறித்த பகுதிகளில் நிறுவப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு வேறு பகுதிகளைச் சேர்ந்த அரச அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
இதன் அடிப்படையில் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்களுக்கு மாத்திரம் தபால் மூலம் வாக்களிக்க சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.
23 உள்ளூராட்சி மன்றங்களுக்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக இம்முறை நான்காயிரத்து 905 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால மூல வாக்களிப்பு இம்மாதம் 29 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது
No comments:
Post a Comment