Wednesday, September 7, 2011

செங்கல்பட்டு அகதி முகாமில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்!

Wednesday, September 07, 2011
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் இலங்கை அகதிகள் 41 பேரை தமிழக போலீசார் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களின் வழக்குகளும் விரைந்து நடைபெறாத நிலையில் இவர்கள் குடும்பங்களைப் பார்க்கக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.

இவர்கள் நீண்டகாலமாக தங்கள் மீதான வழக்குகளை விரைந்து நடத்தக் கோரி போராட்டங்களை நடத்துவதோடு, தங்களை தங்களின் உறவினர்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்குமாறும் போராடி வந்தனர்.

இந்நிலையில் இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 13 பேர் கடந்த மூன்று நாட்களாக சாகும்வரை உண்ணாவிரத்தை துவங்கியுள்ளனர்.இந்த உண்ணாவிரத்தை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் அவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடருகிறது.

No comments:

Post a Comment