Tuesday, September 06, 2011அல் கைதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரை தாம் கைது
செய்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. யூனிஸ் அல் மௌரிதானி எனும் குறித்த நபர்,
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய வர்த்தக மையங்களை தாக்குதல் நடத்துவதற்கு ஒசாமாவினால் நியமிக்கப்பட்ட நபர் எனவும், பாகிஸ்தானின் தென் மேற்கு நகரான குவெட்டாவில் வைத்து இவரை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
மௌருதானியுடன் அவருடைய நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், எஃப். பி. ஐயினால் தேடப்பட்டு வரும் அதிமுக்கியமான நபர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாவிடினும்,
அமெரிக்க இலகுக்களை தாக்குவதற்கு அவர் விருப்பம் கொண்டிருந்ததால், மௌருதானியை சிறைப்பிடித்ததற்கு பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினருக்கு தமது பாராட்டுக்களை தெரிவிப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment