Tuesday, September 20, 2011

யாழ்ப்பாண நகர சபை வெற்றிடங்கள் நிரப்பப்படும்:குருநகர் மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்தார் மாநகர முதல்வர்!

Tuesday, September 20, 2011
20.09.2011 ஆம் தேதி யாழ் குருநகர் மக்களுடைய வேண்டுகோளை ஏற்று குருநகர் பகுதிக்கு மாநகர முதல்வர் நேரடியாக சென்று அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
20.09.2011 ஆம் தேதி யாழ் குருநகர் மக்களுடைய வேண்டுகோளை ஏற்று குருநகர் பகுதிக்கு மாநகர முதல்வர் நேரடியாக சென்று அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தார் .முதலில் குருநகர் சனசமூக நிலையத்ததிற்கும் அடுத்த படியாக பெஸ்கி சனசமூக நிலையத்திற்கும் சென்றார்
இதில் உடனடி பிரச்சனைகளாக வீதி ,மின் விளக்குகள் ஒளிராமை ,மற்றும் வடிகால்கள் புனரமைப்பு போன்ற பிரச்சனைகள் ஆராயப்பட்டன .
.
இப்பிரதோச மக்களுடைய பிரச்சனைகளை கேட்கும் பொருட்டு மாநகர முதல்வருடன் மாநகர உறுப்பினர்களான திரு.அ.கிளபோடாசியஸ், திரு.சுந்தர்சிங்விஐியக்காந் , திரு.அ.ம.மங்களநேசன்,திரு.பி.ஏ.கிறேசியான் மாநகர ஆணையாளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள் உடன் சென்றனர்.

யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் சுகாதார மேம்பாடு கருதி நடமாடும் சேவையொன்று இன்று இடம்பெறுகிறது.

இந்த நடமாடும் சேவையில் ஈடுபட்டுள்ள யாழ்ப்பாண மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா எமது செய்திச் சேவையுடன் தொடர்பு கொண்டு விபரங்களை வழங்கினார்.

இதேவேளை, யாழ்ப்பாண மாநகர சபையில் உள்ள வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான செயற்றிட்டத்தினால் நடத்தப்படும் விசேட நடமாடும் சேவை வவுனியா வீரபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது சட்ட ஆவணங்கள், காலங்கடந்த பதிவுகள், பாடசாலை மாணவர்களுக்கான விசேட ஏற்பாடுகள், நிவாரணம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு காணல், இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சிகள் உள்ளிட்ட பல சேவைகள் முன்னெடுக்கப் படுகின்றன.

அத்துடன், கணவனை இழந்த பெண்கள், விசேட தேவையுடையோர்களுக்கான ஏற்பாடுகள், இலவச சட்ட ஆலோசனைகள்,, மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment