Tuesday, September 20, 2011

(புலிகளின்) கூட்டமைப்பை உடைக்க தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் சதி!

Tuesday, September 20, 2011
கிழக்கில் உள்ள (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்குகொள்ளாத நிலையில் அம்பாறையில் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களின் எதிர்ப்பலைகளின் மத்தியில் தமிழரசுக்கட்சி அலுவலகம் ஒன்றினை மாவை சேனாதிராசாவும், சுமந்திரனும் திறந்திருக்கின்றனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (புலிகளின்)தமிழரசுக் கட்சி அலுவலகம் ஒன்றை அம்பாறை மாவட்டத்தில் மாவை சேனாதிராஜாவும் சுமந்திரனும் திறந்து வைக்க சென்றுள்ளனர்.

இதையறிந்த அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் இளைஞர் அணி, கூட்டமைப்பின் கொள்கைகள் தொடர்பாக அதிருப்தி வெளியிட்டதோடு, அவற்றின் நடவடிக்கைகளை கண்டித்து துண்டுப்பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட அலுவலக திறப்பு விழாவை அம்பாறை மாவட்ட மக்கள் புறக்கணித்ததாக தெரியவருகிறது.

குறித்த அலுவலகத் திறப்பு விழாவில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் உரையாற்றிய மாவை, இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுவதை கடுமையாகச் சாடியதுடன், எமக்குள் பிரச்சினைகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். இது போன்ற நடவடிக்கைகளை இளைஞர்கள் கைவிடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடன் கேட்டபோது, தமக்கு வேறு இடத்தில் கலந்துரையாடல் ஒன்று இருந்ததால் தமிழரசுக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழாவிற்கு செல்லவில்லை எனத் தெரிவித்தார்கள்.

அம்பாறையில் தமிழரசுக்கட்சி அலுவலகம் திறப்பதற்காக மாவையும் சுமந்திரனும் சென்றபோது, (புலி)கூட்டமைப்பின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் இளைஞர் அணி துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டதற்கும் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் திறப்பு விழாவிற்கு சமூகமளிக்காமல் இருந்ததற்கும் தொடர்புகள் இருக்கலாம் என மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினை அழித்து தமிழரசுக்கட்சியினை மட்டும் வலுப்படுத்துவதற்கான முனைப்பில் (புலிகளின்)தமிழரசுக்கட்சியினர் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

இதேவேளை, அம்பாறையில் ஏற்பட்ட எதிர்ப்பினை அடுத்து இறுதி நேரத்தில் விளம்பரப்பலகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று அவசர அவசரமாக எழுதி அலுவலகத்தில் நாட்டியிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அடைப்புக்குறிக்குள் தமிழரசுக்கட்சி என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கிழக்கில் நடைபெற்ற இந்த திறப்பு நிகழ்விற்கு அங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாமை மக்கள் மத்தியில் விசனத்தை தோற்றுவித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment