Tuesday, September 20, 2011

இரண்டு நிதிமன்றத்தில் ஒரே வழக்கு!

Tuesday, September 20, 2011
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமனறத்திலும் மேல் நீதிமன்றத்திலும் ஒரே மாதிரியான இரண்டு வழக்குன் தாக்கல் செய்முள்ளதன் முலம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனம் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று நீதிநமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஹைகோப் விவகார வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் சுட்டிக்கபட்டப்பட்டது.

இராணுவ நிதிமன்றத்தில் இராணுவ சட்டத்தின் பிரகாரமும் மேல் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு சிதிமுறைகளுக்கு அமைவாகவும் பொன்சேகாவுக்கு எதிரான வழக்குகள் தொடரப்படுள்ளதாக சட்டத்தரணி பீரிஸ் இதன் போது குறிப்பிட்டார்.

ஒரு நீதிமன்றத்தில் மோசடியான நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டுகுற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மற்றுமொரு நீதிமனறத்தில் நம்பிக்கைத்துரோகத்தை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி சுனில் பிரிஸ் நிதிமன்றத்தில் விளக்கமளித்தார்.

எனினும் பொன்சேகாவுக்கு எதிராக இரண்டு நிதிமன்றங்களிலும் ஒரே சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக இதன் போது சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த அரச தரப்பு வலிரேஷ்ட சட்டத்தரணி தமித் தொட்டவத்த இரண்டு நிதிமன்றங்களிலும் முன்வைத்த சாட்சியங்கள் ஒரே மாதிரியானவை என்பதை நிரூபிக்க தவறிவிட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்த வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் அன்றைய தினம் இரு தரப்பும் எழுத்துமூல விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment