Tuesday, September 6, 2011

புலி ஆதரவு அமைப்புக்கள் இலங்கையின் ஸ்திரதன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி- ஜீ.எல்.பீரிஸ்!

Tuesday, September 06, 2011
புலி ஆதரவு அமைப்புக்கள் இலங்கையின் ஸ்திரதன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி செய்து வருதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்களும், சிவில் அமைப்புக்களும் இந்த விடயம் குறித்த விழிப்புடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய விசேட சொற்பொழிவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிதிச் சந்தைகள் மற்றும் தேசிய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் தீவிரவாத அமைப்புக்கள் செயற்பட்டு வருவதகாக் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக அளவில் சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் நாடொன்றைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment