Tuesday, September 06, 2011இந்தியாவின் உதவியினாலேயே யுத்தத்தை வெற்றியீட்ட முடிந்தது என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினர் மேற்கொண்ட மனிதாபிமான மீட்புப் பணிகளுக்கு இந்தியா பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர், எட்டு படையணிகளாக முல்லைத்தீவு நோக்கி நகர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது குடும்பத்தினர் மற்றும் சிரேஸ்ட தலைர்கள் ஆகியோரை விமானம் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு சில நாடுகள் முனைப்பு காட்டியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்டை நாடான இந்தியாவின் அளப்பரிய ஒத்துழைப்பினால் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்த இந்தியா பாரியளவிலான பங்களிப்பினை வழங்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, திறந்த பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றியதனால் இலங்கை பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment