Tuesday, September 06, 2011இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் செனல் ஃபோ வெளியிட்டுள்ள கானொளிக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு தயாரித்த அறிக்கை இன்று முற்பகல் ஐக்கிய நாடுகள் சபையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
கானொளி காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின்
கேள்விக்கு பதிலளிப்பதற்கு தாமும் மேஜர் ஜெனரல் ஷவேந்தி சில்வாவும் தயாராக இருப்பதாக ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித்த ஹோகன குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரச இராஜதந்திர அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாலித்த ஹோகன தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை அவுஸ்ரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவீடன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் இதனைக் காட்சிப்படுத்த உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
குறித்த காணொளி காண்பிக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு குறித்த இருவரும் விளக்கமளிக்கவுள்ளனர்.
இலங்கையின் - சனல் போ பதில் காணொளியை காட்சிபடுத்தும் நிகழ்விற்கு ஐக்கிய நாடுகள் சபையின் வழமையான செய்தி சேகரிப்பாளர்களுக்கும், ராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment