Monday, September 19, 2011

ஆறு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் ஈமேசடி செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த இரண்டு முக்கிய சந்தேகநபர்கள் கைது!

Monday, September 19, 2011
ஆறு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் ஈமேசடி செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த இரண்டு முக்கிய சந்தேகநபர்களை கொழும்பு ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக 25 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி ப்ரொக்டர் குறிப்பிட்டார்.

கிருப்பலனை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் சந்தேகநபர்கள் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்களை நடத்திச் சென்றுள்ளமை விசபரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பானந்துரை கண்டி கிருலப்பனை நாராஹேன்பிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பணத்தை இவர்கள் மோசடி செய்துள்ளமையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மாஅதிபர் என். கே இலங்ககோனின் விசேட பணிப்புரையின் பேரில் கொழும்பு ஊழல் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இதன்போது கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஒருகோடியே 20 இலட்சம் ரூபா பணம் மேசடி செய்யப்பட்ட சமபவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தேடப்பட்டு வந்தவர் என்று தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் பாதாளஉலக கோஷ்டியினருடன் தொடர்பு வைத்திருந்தமையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment