Monday, September 19, 2011

நாட்டை கட்டியெழுப்புவதே எதிர்ப்பார்ப்பு - ஜனாதிபதி!

Monday, September 19, 2011
அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவது தமது எதிர்ப்பார்ப்பு எனவும், அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர் அசாத் சாலி உள்ளிட்ட குழுவினரை அலரிமாளிகையில் சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிழக்கின் மாவிலாறு மூடப்பட்டு சிங்கள, முஸ்லீம் மக்களின் வயல் நிலங்கள் பாழாகும் போதே மாவிலாறு அணையை திறந்து விடுமாறு இராணுவத்தினருக்கு அறிவுறுத்தியதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

புலிகளே தங்களுடன் மோத ஆரம்பித்ததாக தெரிவித்த ஜனாதிபதி தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் உண்மையில் தன்னிடம் வைராக்கியம் இல்லையென தெரிவித்துள்ளார்.

தமக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள், தன்னை திட்டியவர்கள் ஆகிய அனைவரும் தற்போது தன்னிடம் வந்துள்ளதாக தெரிவித்த அவர், எவ்வாறாயினும் மக்களுக்காக தன்னால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது மாத்திரமே தனக்கு எஞசியுள்ள பொறுப்பெனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment