Wednesday, September 21, 2011

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற அனுமதி வழங்கக்கூடாது-நாடு கடந்த புலிகளின் பிரதமர் உருத்திரகுமாரன்!

Wednesday, September 21, 2011
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற அனுமதி வழங்கக்கூடாது-நாடு கடந்த புலிகளின் பிரதமர் உருத்திரகுமாரன்!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற அனுமதி வழங்கக்கூடாது என ஐ.நா சபை பொதுக்கூட்ட தலைவர் நஷீர் அப்துல் அசீச் அல்-நஷீருக்கு புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றுள்ள இனப்படுகொலை மற்றும் யுத்தகுற்ற செயல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதேவேளை இறுதி யுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் பொது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள் என ஐ.நா நிபுணர் குழு அறிக்கை குறிப்பிட்டுள்ளதை அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா செயலாளர் நாயகத்தால் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

அத்தோடு யுத்த குற்றவாளிகளுக்கு (புலிகள்) உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்படுமாயின், ஐ.நா சபை அவர்களுடன் சமரசப்பட்டு விட்டது என்று எண்ணத் தோன்றும் என்று உருத்திரகுமாரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மதிப்புக்குரிய உலகத் தலைவர்கள் பேசும் ஒரு அவையில் யுத்தகுற்றவாளிகளுக்கு உரையாற்ற இடமளிப்பது கவலைக்குரிய விடயம் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment