
சீகிரியா பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து வெளிநாட்டவர்கள் சிலரின் பணம் உட்பட உடைமைகளைத் திருடியதாக கூறப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைதான சந்தேகநபர் கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment