Friday, September 23, 2011

இந்திய - அமெரிக்க கடற்படை கூட்டு பயிற்சி தொடங்கியது!.

Friday 23rd of September 2011
சென்னை: இந்தியா, அமெரிக்கா நாடுகளின் கடற்படை கூட்டு பயிற்சியை அமெரிக்க துணை தூதர் ஜெனிபர் எ.மிகின்டயர் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் கடல் வர்த்தகம் வளர்ந்து வரும் வேளையில், அதற்கான சவால்களும், பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்திய மற்றும் அமெரிக்க கடற்படையினர், சவால்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் வகையில் 6 நாள் கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

கருத்தரங்குகள், கடல்பகுதிகளை கண்காணிக்கும் பயிற்சிகள், ஆள் கடத்தல், தீவிரவாதம், வர்த்தக பொருட்கள் கொள்ளையை தடுத்தல், புதிய தொழில்நுட்ப பணிகளை செயல்படுத்துதல், இயற்கை பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்படுவது, கடல் போக்குவரத்து, திறமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி மேற்கொள்கின்றனர்.

அமெரிக்க கடற்படையை சேர்ந்த 4 பேரும், இந்திய கடற்படையை சேர்ந்த 48 அதிகாரிகளும் இதில் ஈடுபடுகின்றனர். இந்த கூட்டு பயிற்சியை அமெரிக்க தூதர் ஜெனிபர் எ.மிகின்டயர் இன்று தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் 50-க்கும் அதிகமான இந்திய கடற்படையினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment