Friday, September 23, 2011

759 கையடக்கத் தொலைபேசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன!

Friday 23rd of September 2011
சட்ட விரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 759 கையடக்கத் தொலைபேசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

டுபாயில் இருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவரே இந்த கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டு வந்தததாக விமான நிலைய சுங்கப்பிரிவு குறிப்பிடுகின்றது.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த கையடக்கத் தொலைபேசிகள் சுமார் 57 இலட்சம் ரூபா பெறுமதியானவை என்றும் சுஙகப்பிரிவு கூறுகின்றது.

No comments:

Post a Comment