Friday, September 23, 2011

போதையில் வந்த ஆசாமியின் மீன்பிடி படகு மோதி ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் சேதம்!.

Friday 23rd of September 2011
மாஸ்கோ: போதையில் மீன்பிடி படகு ஓட்டிவந்தவர், ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் மீது மோதினார். அதிர்ஷ்டவசமாக கப்பல் தப்பியது. இதுகுறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறியதாவது: ரஷ்யாவின் பெட்ரோபாவ்லாஸ்கி-கம்சட்கா கடல் பகுதியில் அணுஆயுதம் தாங்கிய, செயின்ட் ஜார்ஜ் தி விக்டர் என்ற நீர்மூழ்கி கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது மீன்பிடி படகு ஒன்று நீர்மூழ்கி கப்பல் மீது திடீரென மோதியது.

வேறு ஒரு படகு மீது மோதுவதை தவிர்க்க திடீரென திருப்பியதால் இந்த விபத்து நடந்தது. மீன்பிடி படகை ஓட்டி வந்தவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக நீர்மூழ்கி கப்பல் லேசான சேதத்துடன் தப்பியது.

அதனால் கதிர்வீச்சும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.சேதம் அடைந்த நீர்மூழ்கி கப்பலின் வெளிப் பகுதியை பழுதுபார்க்க அனுப்பப்பட்டுள்ளது. இந்த கப்பல் கடந்த 80ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். இந்த விபத்து கடந்த 20ம் தேதி நடந்தாலும், இப்போதுதான் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment