Friday, September 30, 2011அதிகளாவன இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
வீசா கலாவதியான மற்றும் சட்டவிரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் இலங்கையர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பிரித்தானிய காவல்துறையினர் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாரத்தில் நான்கு இலங்கை சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment