Friday, September 23, 2011

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டால் அதற்கு தீர்வுகளை வழங்கத் தயார்-பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!

Friday 23rd of September 2011
மீள் குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டால் அதற்கு தீர்வுகளை வழங்கத் தயார் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதனைப் போன்று காணிகள் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படவுமில்லை, மக்களிடம் காணிகள் அபகரிக்கப்படவுமில்லை.

நாற்பது ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றார்.

இயற்கையை நேசிக்கும் அவர் சரியான தீர்மானங்களை எடுப்பார் என பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை என்ற கருத்து பிழையானது, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment