Friday, September 23, 2011

அல்லைப்பிட்டியில் ரெலோ பிரமுகர் தவநாதன் பலி சாரதி படுகாயம்!

Friday 23rd of September 2011
அல்லைப்பிட்டிச் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த சொகுசுகார் பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்தச் சம்பவத்தில் முன் ஆசனத்தில் இருந்து பயணித்தவர் அந்த இடத்திலேயே பலியானார். காரின் சாரதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம் பெற்றது. விபத்தில் நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த அருமைநாதன் தவநாதன் (வயது 62) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

படுகாயமடைந்தவர் திருநெல்வேலியைச் சேர்ந்த சே.சஜீபன் (வயது 24) என்பவர் ஆவர். இவர் தான் காரின் சாரதி.
விபத்தில் மரணமானவர் ரெலோ இயக்கத்தின் முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய மத்தியகுழு உறுப்பினரும் ஆவார்.

ஊர்காவற்றுறையில் நேற்று இடம்பெற்ற உறவினர் ஒருவரின் மரணச் சடங்குக்காக சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. காரில் சாரதியுடன் இறந்தவரான தவநாதனும் பின் ஆசனத்தில் இன்னொருவருமாக மூவர் பயணித்துள்ளனர். பின் ஆசனத்தில் இருந்தவர் எந்தவித காயங்களுமின்றி தப்பிவிட்டார்.

ஊர்காவற்றுறை நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா மரண விசாரணை மேற்கொண்டார். சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment