Friday, September 16, 2011ஈராக், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனக் கோரும் தரப்பினர் உலகின் ஏனைய நாடுகளில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சஜின்வாஸ் குணவர்தன தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச படையினர் கைதிகள் மீது மேற்கொண்ட சித்திரவதைகள், பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பிலும் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இலங்கை ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டு;ள்ளார்.
No comments:
Post a Comment