Wednesday,September 28, 2011
கொழும்பு:கொழும்பு நகரின் பொருளாதாரம் பாதாளத்திற்குச் செல்லும் நிலை தோன்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கின்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரவித்துள்ளதாவது,
கொழும்பு மாநகரில் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களை நிறுத்தி புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலை ஏற்படுமானால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்படுவர்.
கொழும்பு நகரின் பொருளாதாரம் பெருமளவில் நடுத்தர வர்க்கத்தினரையே சார்ந்துள்ளது. இவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் கொழும்புப் பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்பே பெரிதும் ஏற்படும். அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை nவியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினால் 1978 ஆம் ஆண்டு ஆட்டோ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது மாத்திரமன்றி அம்பாந்தோட்டை அபிவிருத்திக்கு மட்டும் பெருமளவான தொகையை அரசாங்கம் செலவிடுகிறது. அத்துடன் உள்ளுராட்சித் தேர்தலுக்கும் பெருமளவான நிதியை செலவிடுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments:
Post a Comment