Wednesday, September 28, 2011கொழும்பு:மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனியா வீதி புனேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 3 வயது பெண் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 12.40 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற வானும் அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதூண்டதிலேயே விபத்து எற்பட்டுள்ளது.
விபத்தில் புனேவ பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண்ணொருவரும் 3 வயது பெண் குழந்தையுமே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமுற்ற மோட்டார் சைக்கிள் சாரதி அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment