Wednesday, September 28, 2011இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்களை கடத்த முயற்சித்த இருவரை தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கஞ்சா மற்றும் புகையிலை தயாரிப்பு போதைப் பொருட்களை குறித்த சந்தேகநபர்கள் இலங்கைக்கு கடத்த முயற்சித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு ஒன்றை தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸார் இன்று சோதனை செய்தபோது அதிலிருத்து இரண்டு கஞ்சா பைகள் மற்றும் புகையிலை தயாரிப்பு போதைப் பொருள்(snuff powder) 8 கிலோ கிரேம் என்பவை மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மீன்பிடிப் படகையும் போதைப் பொருள் கடத்திவர பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றையும் கியூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.....
கேரளாவில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது!
34 இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்ல முற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் ( 5 இலங்கையர்கள், 4 கேரள பிரதேசத்தவர்கள்) புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் கலமசேரி பொலிஸ் முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளதாக ஏர்ணாகுள மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஹர்சித அட்லூரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு கியூ பிரிவு பொலிஸார் அவர்களை விசாரணை செய்யும் வரை எதுவித உறுதியான தகவல்களையும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு கியூப் பிரிவு பொலிஸார் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை விசாரணைகளை மேற்கொள்ள வந்துவிடுவார்கள் என குறிப்பிட்ட அவர் தடுத்து வைக்கப்பட்டு அகதிகள் அவர்களுக்கு உரிய முகாம்களுக்கு அனுப்பு வைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அகதிகள் முகாமில் நிலவி வரும் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு மக்கள் வெளியேறி செல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என குற்றத் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment