Monday, September 12, 2011

அனைத்து பாதுகாப்பு தடுப்புச் சட்டங்களையும் ஆராயுமாறு இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை அழுத்தம்!

Monday, September 12, 2011
அனேகமான நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீர்மானிக்கும் போது மனித உரிமைகளை கவனத்தில் கொள்ளாது தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், அது போன்றே இலங்கை எனவும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதஉரிமை ஆணைக்குழுவின் 18 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டு மக்கள் மூன்று தசாப்தங்களாக மட்டும் பயங்கரவாத செயல்களால் மட்டும் கொடூரமான விளைவுகளுக்கும் முகம்கொடுக்கவில்லை வெற்றி பெற்ற அரசாங்கங்கள் மனித உரிமைகள் மற்றும் அதனூடன சட்டங்களை பொருட்படுத்தாமையும் அவ்வாறான சம்பவங்களுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது போன்று மேலும் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து பாதுகாப்பு தடுப்புச் சட்டங்கள் குறித்தும் ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment