Friday, September 16, 2011

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலிருந்து மொஹமட் மஹ்ரூப் நீக்கப்பட்டுள்ளார்!

Friday, September 16, 2011
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலிருந்து மொஹமட் மஹ்ரூப் நீக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக மொஹமட் மஹ்ரூப்பிற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

கட்சி யாப்பின் பிரகாரம் தலைவருக்குள்ள அதிகாரங்களின்படி செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்ட 20 உறுப்பினர்களில் மொஹமட் மஹ்ரூப்பும் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்தார் என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சராக விளங்கிய மொஹமட் மஹரூப் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் கொழும்பு மாநகர சபைக்காகப் போட்டியிடுகின்றார்.

No comments:

Post a Comment