Friday, September 16, 2011

சீனா - வங்கதேச நாடுகள் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்பந்தம்!.

Friday, September 16, 2011
பீஜிங்: சீனா - வங்கதேச நாடுகள் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தின. வங்கதேச ராணுவ தளபதி ஜெனரல் முகமது அப்துல் முபீன், சீன தலைநகர் பீஜிங்குக்கு நேற்று வந்தார். சீன ராணுவ துறை அமைச்சர் லியாங் குவாங்லியை, முபீன் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து லியாங் கூறுகையில், ÔÔவங்கதேச நாட்டுடன் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த சீனா தயாராக இருக்கிறது. ஆசிய பகுதிகளில் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தப்படும்ÕÕ என்றார். முபீன் கூறுகையில், சீன ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற வங்கதேசம் விரும்புகிறது. ராணுவ ஒத்துழைப்பு மூலம் இருநாட்டு உறவு பலப்படுத்தப்படும். அத்துடன் பல துறைகளில் இருநாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment