Thursday, September 29, 2011

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது!

Thursday,September, 29, 2011
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்ற ராமதாஸ், டல்பின்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான படகு உரிமையாளர் செல்வகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு, ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க செல்ல தயாரான படகுகளில் "கியு' பிரிவு போலீசார் சோதனை செய்தனர். ஒரு படகினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோ கஞ்சா, 15 கிலோ புகையிலை, 8 கிலோ மூக்குப்பொடி, 2 கிலோ பான்பராக் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். படகில் இருந்த ராமதாஸ், டல்பின்ராஜ் ஆகியோரை கைது செய்து, மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவான படகு உரிமையாளர் செல்வகுமார், மொபைல்போன் மூலம் கியு பிரிவு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இவர், புலிகள் இயக்கத்திற்கு ரெக்சின், ஜெனரேட்டர், பேட்டரிசெல், துப்பாக்கி குண்டுகள், சாட்டிலைட்போன் மற்றும் "பிரவுன் சுகர்' உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தியதற்காகவும், புலிகள் இயக்கத்தினர் பலரை படகில் ஏற்றிச் சென்றதற்காகவும் கைது செய்யப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment