Thursday,September, 29, 2011கொழும்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆண்டு காலங்களாக தனியார் பஸ் நிலையம் ஒன்று இல்லாமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இதனை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது நிதி ஓதுக்கீட்டின் மூலம் மட்டு நகருக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய தனியார் பஸ் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகளை இன்று ஆரம்பித்து வைத்தார்.
இதற்காக முதற்கட்ட வேலைக்காக அவரது நிதியிலிருந்து சுமார் 50லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment