Thursday, September 29, 2011

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவருக்கு மீண்டும் அதே தண்டனை!

Thursday,September, 29, 2011
கொழும்பு:நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தை அவமதித்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர இன்று மீண்டும் அந்த தண்டனையை விதித்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் வைத்து இந்த நபர் 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி 3.7 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு குறித்த நபருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வத்தளை பிரதேசத்தில் வைத்து கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டு மீண்டும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் சந்தேகநபருக்கு ஆயுள்தண்டனை விதித்தது.

No comments:

Post a Comment