Wednesday, September 28, 2011

விதவைப் பெண்ணுடன் தொடர்புடைய இருவருக்கிடையில் சண்டை: ஒருவர் கொலை!

Wednesday, September 28, 2011
விதவை பெண்ணொருவரை காதலித்த இருவருக்கிடையில் எழுந்துள்ள சண்டையின் விளைவால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.(27.9.2011)

குறித்த இந்த சம்பவம் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் வீட்டின் முன்னிலையிலேயே இக் கொலைச் சம்பம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சம்பவம் இடம்பெற்று 30 நிமிடங்களின் பின் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். இவ்வாறு சரணடைந்தவர் இராணுவ வீர்ர் என குறிப்பிடப்படுகிறது.

இறந்து போனவர் விதவைப் பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்த முயன்றதாகவும், அதனை தடுக்கும் வகையில் தான் அவரை தாக்கியதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இறந்து போனவரும், சந்தேக நபருமாகிய இருவரும் குறித்த விதவைப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. தம்புளை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துகின்றனர்.

No comments:

Post a Comment