Tuesday, September 27, 2011செனல் 4 காணொளி நாளைய தினம் கனடாவில் உள்ள ஒட்டாவா நகரத்தில் ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கனேடிய கிளை அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பெட்ரிக் ப்ரௌன் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கு பிரதி பணிப்பாளர் எலன் பியர்சனும் கலந்துக் கொள்ளவுள்ளார்.
ஒட்டாவா நகரில் - லா பிரேமாநாடே கட்டிடத்தில் இந்த காணொளி காண்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை வெளியுறவுத் துறைஅமைச்சுடன் எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு வினயது.
தமக்கும் இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக, அமைச்சின் பேச்சாளர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில், கனேடிய தூதுவரின் ஊடாக இந்த காணொளி காட்சிப் படுத்தை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment