Tuesday, September 27, 2011ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து கனடா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு எதிரா ஐக்கிய நாடுகள் அமைப்பு காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கனடா விசனம் வெளியிட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன், ஜோன் பெயார்ட் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, பொதுநலவாய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை காணப்படுவதாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த காத்திரமான முனைப்பு காட்டப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment