Tuesday, September 27, 2011ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிட நிரந்தர பிரதநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இலங்கையின் இராஜதந்திரியாக செயற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக வெளிவிவகா அமைச்சு தெரிவிக்கின்றது.
நியுயோர்க் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட அறிவித்தலை ஜவேந்திர சில்வாவிடம் ஒப்படைக்கும் முயற்சி தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறப்பு சலுகைகள் இராஜதந்திர விவகாரங்கள் தொடர்பான வியானா சாசனத்திற்கு அமைவாகவே ஷவேந்திர சில்வா நியுயோர்க்கில் தங்கியிருப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக ஷவேந்திர சில்வா அந்த சாசனத்தின் கொள்கைகளுக்கு அமைவாகவே அங்கு தங்கியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளது.
ஐ.நா சாசனத்தின் பிரகாரம் ஷவேந்திர சில்வா இலங்கை சார்பாக இராஜதந்திர கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு தேவையான புறச்சூழலை அவர் தங்கியிருக்கும் நாட்டில் உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளி் பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த விடயம் தொடர்பாகவும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment