Wednesday, September 28, 2011

அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த நிலையில் ரோமானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது!

Wednesday, September 28, 2011
அகதி அந்தஸ்துக் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த நிலையில் ரோமானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தமது எதிரப்பைத் தெரிவித்துள்ள இலங்கை அகதிகள் தங்களை அவுஸ்திரேலியாவில் குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் அவர்களை அடுத்த மாதம் நெதர்லாந்துக்கு அனுப்புவது என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வருகிறது.

இதேவேளை, புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையரில் ஒரு தொகையினர் நாளை மறுதினம் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். தனி விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். பிரித்தானியாவில் தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படும் இரண்டாவது தொகுதியினர் இவர்களாவர்.

No comments:

Post a Comment