Wednesday,September 14,2011
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை உடனே விடுதலை செய்ய கோரி மலேசியாவில் உள்ள (புலிகளின்) மாற்று செயல் அணி, தமிழர் மேம்பாட்டு பேரவை, சிலாங்கூர் மனிதநேய ஒற்றுமை கழகம் போன்ற அமைப்புகளும் ,
மலேசிய (புலி)உணர்வாளர்களும் இணைந்து மாற்று செயலணி தலைவர் கலைவாணர் தலைமையில் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்து இரண்டு ஆயுள் தண்டனையாக சிறையில் வாடும் 3 தமிழர்களையும் இந்திய அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும். மேலும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 20 ஆண்டுகளுக்கு மேலாக தன் மகளை பிரிந்து சிறையில் வாடும் நளினியையும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரும் மனுவை இந்திய தூதரக அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.
ஆர்பாட்டத்தில் நின்ற மாற்று செயலணித் தலைவர் கலைவாணர், ‘’ ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சரியான விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோரை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதற்க்கு மலேசியாவில் வாழும் 10 ஆயிரம் தமிழர்களிடம் தனித்தனி அட்டைகளில் கையெழுத்து வாங்கி இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பும் பணியும் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்திய அரசின் நடவடிக்கையை பொருத்து எங்களின் அடுத்த கட்ட போராட்டம் இருக்கும்’’ என்றார்.

No comments:
Post a Comment