Wednesday,September 14,2011இலங்கையில் தமிழ், சிங்கள அல்லது முஸ்லிம் காவல்துறையினர் கிடையாது-பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா!
இலங்கையில் தமிழ், சிங்கள அல்லது முஸ்லிம் காவல்துறையினர் கிடையாது என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். நாட்டில் இலங்கைக் காவல்துறையினர் கடமையாற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் காவல்துறையினரை வடக்கில் கடமையில் அமர்த்த வேண்டுமென அமெரிக்க துணை இராஜாங்கச் செய்லாளர் ரொபர்ட் ஒ பிளக் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினரின் நடவடிக்கைகள் இனரீதியாக பார்க்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment