Sunday, September 25, 2011

அமெரிக்க உள்விவகார பாதுகாப்புச் சட்டத்திற்கு நிகரான பயங்கரவாதத் தடைச் சட்டமொன்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது!!

Sunday, September 25, 2011
இலங்கையில், அமெரிக்க பாணியிலான பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக, அமெரிக்க உள்விவகார பாதுகாப்புச் சட்டத்திற்கு நிகரான சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், அமர்வுகளுக்கு முன்னதாக இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சர்வதேச ரீதியில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களின் காரணமாக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில் பயன்படுத்தப்படும் சட்டங்களுக்கு நிகரான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தில் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடாது போன்ற காரணிகளைக் கருத்திற் கொண்டு இந்த புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment