Monday, September 19, 2011

அதிகாரப்பகிர்வுக்கு பாரதீய ஜனதா கட்சி ஆதரவு!

Monday, September 19, 2011
இலங்கைக்கு வந்துள்ள பாரதீய ஜனதாக்கட்சியின் சிரேஸ்ட தலைவர் முரளி மனோஹர் ஜோசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துள்ளது.

இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு உறுதியான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முன்னர் முறிவடைந்த போதும் கடந்த 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானது.

இதனையடுத்து இரண்டு தரப்பும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை காணுவது தொடர்பில் இரண்டு தரப்பும் உடன்பாட்டை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்டவாக்க ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதற்கும் இரண்டு தரப்பும் கூட்டு அறிக்கையின்படி இணங்கியுள்ளன.

இதன்போது ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு ஒன்று உடனடியாக அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பௌத்த தலைவர்களில் ஒருவரான அநாகரிக தர்மபாலவின் 147 வது ஜனன தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சொற்பொழிவில் பங்கேற்பதற்காக ஜோசி இலங்கை வந்திருந்தார்.

இலங்கை, புத்தபெருமானின் போதனைகளை பின்பற்றி அதன் மூலம் சமூகங்களுக்கு இடையில் நல்லெண்ண
த்தை கட்டியெழுப்பி சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் தமது உரையின் போது வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment