Monday, September 19, 2011

UN முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸின் புத்தகத்தையே தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழு பிரதி செய்துள்ளது-ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்!

Monday, September 19, 2011
UN முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸின் புத்தகத்தையே தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழு பிரதி செய்துள்ளது-ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக் கிளையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸின் புத்தகத்தையே தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழு பிரதி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச செய்திச் சேவை ஒன்றுக்கு அளித்த நேர் காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சனல்4 காணொளி மற்றும் கோர்டன் வெய்ஸினால் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகம் ஆகியவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டு ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தயாரித்துள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை திருப்திபடுத்தும் நோக்கில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட முடியாது.

படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்கள் போர் வலயத்தில் விழுந்திருக்கலாம்.

பயங்கரவாதம் மீளவும் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதனால் வடக்கில் அதிகளவு துருப்பினர் குவிக்கப்பட்டுள்ளதாக ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment