Monday, September 12, 2011

புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான ஒப்பந்தம் அமுல்படுத்தப்படும் - அவுஸ்திரேலியா!

Monday, September 12, 2011
புகலிடக் கோரிக்கையாளர்களை பரிமாற்றிக் கொள்வது தொடர்பில் மலேசியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களை பரிமாறிக் கொள்ளும் திட்டத்தை முன்னெடுக்கவே தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவுடன் அகதிகளைப் பரிமாறிக் கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தடை விதித்திருந்தது.

800 புகலிடக் கோரிக்கையாளர்களை மலேசியாவிற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து கட்டம் கட்டமாக 4000 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக் கொள்வதற்கு அவுஸ்திரேலியா இணங்கியுள்ளது.

படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நபர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எனினும், இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு விரும்புவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் புதிய சட்டத் திருத்தங்களை அமுல்படுத்துவதன் மூலம் புகலிடக் கோரிக்கையாளர் பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்க உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment