Monday, September 12, 2011

சம்பந்தனின் நம்பிக்கை குறித்து விக்கி லீக்ஸ்!

Monday, September 12, 2011
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பணியாளர்கள்,இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் ஆகியோரின் எண்ணப்பாடுகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அவற்றை உள்ளீர்த்த கொள்கையை முன்நகர்த்தும்வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு வெளிமட்டத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமென கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட இராஜதந்திர கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையிலிருந்து 2009 டிசம்பர் 14 திகதியிடப்பட்ட கேபிள் ஒன்று தூதுவர் பற்றீசியா பட்டனீஸினால் அனுப்பப்பட்டுள்ளது. கொழும்பிற்கு அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து இந்தக் கேபிள் அனுப்பப்பட்டிருக்கிறது.அமெரிக்க வெளிவிவகார சேவை பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாகவே இந்தக் கேபிள் அனுப்பப்பட்டிருந்ததாக ஏசியன் ரிபியூன் இணையத்தளம் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளது.

2009 டிசம்பர் 14 இல் விக்கிலீக்ஸ் இராஜாங்கத் திணைக்களத்தின் இராஜதந்திரக்கேபிளை வெளியிட்டிருந்தது. குறிப்பிடத்தக்க கொள்கைத் தீர்மானம் தொடர்பாக அந்தக் கேபிள் அமைந்திருந்தது. நல்லிணக்கம், வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு, யுத்தத்தின் போதான இறுதி மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான பதிலளிக்கும் கடப்பாடு போன்ற விவகாரங்கள் குறித்து பட்டனீஸ் கையெழுத்திட்டுள்ள இராஜதந்திரக் கேபிளில் இந்தக் கொள்கை தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. "பிளேக் வாதிட்டார்' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயங்களில் அரசாங்கத்தை கவனம் செலுத்தச் செய்வது தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தை முன்தள்ளி விடுவதற்குத் தேவையானதென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக், "விடயத்தின் தற்போதைய நிலைமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். இராஜதந்திரக்கேபிளில் இது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கை விவகாரங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அதன் வெளிவிவகாரச்சேவை அதிகாரிகள் தொடர்பான கொள்கையை மேம்படுத்துவது குறித்து ரொபேர்ட் பிளேக் வெளிப்படுத்தியிருந்தார்.

2009 மே இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கொள்கை நிகழ்ச்சி நிரல் மேம்படுத்தப்பட்டிருந்தது. அச்சமயம் இலங்கை அரசாங்கம் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. வெளிமட்ட சக்திகளின் அழுத்தத்திற்கமைய செயற்படுவதில்லையென்ற தனியான நிலைப்பாட்டையும் நம்பிக்கையையும் இலங்கை அரசாங்கம் கொண்டிருந்தது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கொழும்பிலுள்ள வெளியுறவுச்சேவை அதிகாரிகள், புலம்பெயர்ந்த தமிழ்ப் பணியாளர்கள், சர்வதேச உரிமை அமைப்புகள், இராஜாங்கத் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டுக்கு நிதியளிப்பீடு செய்கின்றனர்.

கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள், உதவி வெளிவிவகார அமைச்சர் பிளேக்கின் வாஷிங்டன் அலுவலகம் என்பன புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகப் பணியாளர்கள், உரிமை அமைப்புகள் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை விவகாரங்களில் கொள்கை நிகழ்ச்சி நிரலை அபிவிருத்தி செய்து வருகின்றனர். அமெரிக்காவின் பாரிய திட்ட வடிவமைப்பானது அனுப்பப்பட்ட இரகசிய இராஜதந்திரக்கேபிள்களில் வெளிப்பட்டிருப்பதாகவும் ஏசியன் ரிபியூன் தற்போது அதனைப் பரிசீலிப்பதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.

2009 மே 26 இல் கொழும்பிலிருந்து வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திரக் கேபிளானது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எதனை இலங்கை அரசாங்கத்தை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தது என்பதை வெளிப்படுத்துவதாகவுள்ளது.
அதேசமயம், வாஷிங்டனின் விருப்பத்தையும் வெளிப்படுத்துகின்றது. விடைபெறும்போது இலங்கையில் அமெரிக்க தூதுவராக இருந்த ரொபேர்ட் பிளேக், தமிழர் விவகாரங்களுக்குத் தீர்வு காணுமாறு தீவிரமாகச் செயல்பட்டார். புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்களின் அரசியல் கவலைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண்பதற்கான தருணமென அவர் குறிப்பிட்டதாக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌரவத்துடன் கூடிய அரசியல் முறைமை தமிழர்களுக்குத் தேவைப்படுவதாக தன்னுடன் கதைத்த சகலரிடமும் தூதுவர் தெரிவித்ததாக கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை அமுல்படுத்துவதற்குத் தேவையான அரசியல் அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கான ஆதரவை பிரதான எதிர்க்கட்சியிடமிருந்து பெற்றுக்கொள்வதன் மூலமும் தமிழ் மக்களுடன் அரசியல் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தையை மேற்கொள்வதன் மூலமும் நடவடிக்கையெடுக்குமாறு தூதுவர் குறிப்பிட்டதாகவும் அந்தக் கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட இரு நாட்களில் கொழும்பிலிருந்து எழுதப்பட்ட இராஜதந்திரக்கேபிள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2010 ஜனவரி 15 இல் இரகசிய இராஜதந்திரக் கேபிள் ஒன்று கொழும்பிலிருந்து வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு பந்தியானது பதிலளிக்கும் கடப்பாட்டை உள்ளடக்கியிருந்தது. "நிர்வாகமானது முழுமையான விசாரணைகளைத் தனது படையினர்,சிரேஷ்ட அதிகாரிகள் மீது போர்க் குற்றங்களுக்காக முன்னெடுப்பதற்கான நிவாரணங்கள் அங்கு இல்லை என்பதை நாங்கள் (அமெரிக்கர்கள்) அறிவோம்.அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கும்போது அதனை மேற்கொள்ளாதென்பதை நாம் அறிவோமென்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இராஜதந்திரக் கேபிள் அனுப்பப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக 2009 டிசம்பர் 14 இல் இதே பதிலளிக்கும் கடப்பாட்டு விவகாரம் குறித்து அமெரிக்கத் தூதரகம் கேபிளொன்றை அனுப்பியிருந்தது. அதில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை மேற்கோள்காட்டியிருந்தது.

பதிலளிக்கும் கடப்பாடு முக்கியமானதென தமிழ்த் தலைவர் சம்பந்தன் நம்புகிறார். ஆனால், அந்த விடயத்தை அரசாங்கம் முன்னெடுப்பதற்கான எதிர்பார்ப்புகள் பிரகாசமாக இல்லை என்பது பற்றி அவர் யதார்த்த பூர்வமானவராக இருந்தார். உலகில் எங்குமே பதவியிலிருக்கும் அரசாங்கம் அவ்வாறு செயற்படுவதற்கான வரலாற்று ரீதியான முன்னுதாரணங்கள் இல்லை. தனது சொந்தப் படையினர் அல்லது தலைவர்களை போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்யும் வரலாறு முன்னுதாரணமாக இருந்ததில்லை. எவ்வாறாயினும் நாட்டின் ஆரோக்கியத்திற்கும் உண்மை வெளிவருவதற்கும் இது முக்கியமானதென சம்பந்தன் கூறினார்'.

No comments:

Post a Comment