Monday, September 12, 2011

ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. தீர்மானங்களுக்கு இலங்கை ஒரு போதும் அடிபணியாது-குணதாச அமரசேகர!

Monday, September 12, 2011
ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தின் அமர்வில் எத்தீர்மானம் எடுத்தாலும் அதற்கு இலங்கை ஒரு போதும் அடிபணியாது. மீறி அழுத்தங்களையோ தலையீடுகளையோ மேற்கொள்ள நினைத்தால் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை சர்வதேச நாடுகளும் ஐ.நா.வும் எதிர்கொள்ள நேரிடும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு கிடையாது என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில்,

சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராக தீவிரமான முறையில் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமை சாசனத்தின் அமர்வுகளை இலங்கைக்கு எதிரான களமாக பயன்படுத்த பல நாடுகள் சூழ்ச்சி செய்கின்றன.

நாட்டின் மனித உரிமை பிரச்சினைகள் மற்றும் ஜனநாயக பிரச்சினை என்பன உள்நாட்டு விடயங்களே தவிர இவற்றில் ஐ.நா. வோ சர்வதேசமோ தலையிடுவதை அனுமதிக்க முடியாது.

எனவே ஜெனீவா அமர்வுகளில் எவ்வகையான தீர்மானங்களை இலங்கைக்கு எதிராக மேற்கொண்டாலும் அவற்றுக்கு ஒரு போதும் அடிப்பணியப் போவதில்லை. இவ் அமர்வுகளில் பங்கேற்றுள்ள இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சூழ்ச்சிக்காரர்களுக்கு சார்பாக செயற்பட்டு விடக்கூடாது தீர்மானங்களை மேற்கொண்டு தலையீடுகளை ஏற்படுத்தும் போது அவற்றுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராக வேண்டும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment