Monday, September 12, 2011

சொத்துக் குவிப்பு வழக்கு : ஜெயலலிதா அக்டோபர் 20ல் நேரில் ஆஜராக உத்தரவு!

Monday, September 12, 2011
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்குகோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

பாதுகாப்பு காரணத்தை காட்டி விலக்கு கோரி இருந்தார் ஜெயலலிதா. வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம் வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆஜராகும் தேதியை செப்டம்பர் 12ம் தேதிக்குள் ஜெயலலிதா தெரிவிக்க வேண்டும் என்று கோர்ட் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி இருந்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதாக ஜெயலலிதா தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

சம்மதத்தை அடுத்து ஜெயலலிதா மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர், சொத்து குவிப்பு வழக்கில் அக்டோபர் 20ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டனர்.

மேலும், ஜெயலலிதா ஆஜராவதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பாதுகாப்புகருதி விசாரணையை பெங்களூர் நீதிமன்றம் ஒரே நாளில் முடிக்க வேண்டும் என்றூம் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment