Monday, September 12, 2011

சர்வதேச கைதிகள் தினமான இன்று இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு மகஜர்!

Monday, September 12, 2011
சர்வதேச கைதிகள் தினமான இன்று இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யக்கோரி அரசாங்க அதிபர்கள் ஊடாக ஜனாதி பதிக்கு மகஜர் ஒன்றைக் கையளிக்க உள்ளனர்.

நாட்டில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தும் தங்களது உறவுகளை விடு தலை செய்வதற்கான எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கை களையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப் பின் முன்னாள் போராளிகளை பொதுமன்னிப்பு அடிப்படையில் அரசாங்கம் விடுதலை செய்வதைப் போன்று தடுத்துவைக்கப்பட் டுள்ள தமது உறவுகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் சர்வதேச கைதிகள்தினமான இன்று ஜனாதிபதியைக் கேட்டுக்கொள் வதாக அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையளிக்கப்படவுள்ள அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேதகு ஜனாதிபதி அவர்களே, சர்வதேச சிறைக்கைதிகள் தினமான இன்று, இலங்கையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளின் விடுதலை கோரும், இந்தப் பொதுமனுவை யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பதுளை, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக தங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.

அரசியல் கைதிகளாகிய எமது உறவுகள் கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண நிலையின்போது, அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நாட்டின் பல்வேறு சிறைகளிலும் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட் டுள்ளார்கள்.

நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்தபோது, அவர்களுக்கும் விடுதலை கிடைக்குமென நாங்கள் மகிழ்ச்சி யடைந்தோம். ஆனால், இரண்டு வருடங்கள் கடந்தும் அவர் களின் விடுதலை தொடர்பாக எந்தவிதமான முன்னேற்றகரமான சமிக்ஞைகளும் எங்களுக்கு கிடைக்கவில்லை . இது எங்களுக்கு பாரிய மன வேதனையை அளிக்கின்றது.

கல்வி கற்கும் பிள்ளைகளின் எதிர்காலம், கையேந்தும் நிலையிலிருக்கும் குடும்பப் பொருளாதாரம் என்பவை உட்பட, சிக்கலான பல விடயங்களுக்கு இன்று நாம் முகங்கொடுக்கிறோம். வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவிற்கு, வேதனையை சுமக்கிறோம். இதற்கான நிரந்தர தீர்வை தங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

யுத்தத்துடன் தொடர்புபட்ட பல்வேறு காரணங்களுக்காக, சிறையில் வாடும் எமது உறவுகளை எங்களுடன் மீளிணைய வழிவகை செய்யுங்கள். இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் மறுவாழ்விற்கு சந்தர்ப்பம் வழங்கி, அவர்களை விடுதலை செய்கிறீர்கள். இதை நாம் வரவேற்கிறோம். சிறையிலுள்ள எமது உறவுகளுக்கும் இதே போன்று ஒரு சந்தர்ப்பம் வழங்கி அவர்களையும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment